Thursday, March 12, 2015

மனம் குறித்து- ஓஷோ



மனம் குறித்து ஓஷோ சொன்னது :
மனம் முன்னும் பின்னும் தாவிக் குதிக்கும் .
முன்னும் பின்னும் தங்கிக் கிடக்குமே தவிர
உரிய கணத்தில் இருப்பதில்லை .
அது பயனற்றதை பேசிக் கொண்டிருக்கும் .
பயனற்ற பேச்சு நம்மை நிகழ்காலத்தில் இருக்க விடாமல்
செய்து விடும் .
வாழ்கையை முழுமையாய் வாழ விடாது .
நாம் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போது
மனம் தன்பாட்டுக்கு பயனற்ற எண்ணங்களில் ஓடிக்கொண்டிருந்தால்
வாழ்கையை எப்படி முழுமையாய் வாழ முடியும் ?


ஒரு சிறிய சோதனை மூலம் இதனை நீங்களே உணர்ந்து
கொள்ள முடியும் .
சில கணங்களுக்கு உங்கள் கண்களை மூடுங்கள் .
எவ்வளவு நேரம் உங்களால் சும்மா உட்கார்ந்து இருக்க
முடிகிறது .
உடல் , உணர்வு எப்படி ,
உங்களைச் சுற்றி என்னென்ன சப்தங்கள்
கேட்கிறது என்பதை மனதால் பாருங்கள் .
எவ்வளவு நேரம் உங்களால் சும்மா உட்கார்ந்து இருக்க
முடிகிறது .
ஒரு நிமிடத்துக்கு மேல் நீடிக்க வாய்ப்பில்லை . உங்கள் மனம்
வம்பளப்பில் ஈடுபட்டுவிடும் . வாழ்க்கை தனது
ஒவ்வொரு கணத்திலும் நமக்காக வைத்திருப்பதை
நாம் அனுபவித்து மகிழ விடாமல் அது தடுத்து விடும் .
வாழ்வின் அற்புத கணங்களில் இருந்து நம்மைப் பிரித்துப் போடும்
மனதின் வம்பளப்பில் இருந்து விடுபட என்ன செய்யலாம் ?
தியானத்தில் ஈடுபடுங்கள் என்று ஓஷோ திரும்பத் திரும்ப
சொல்கிறார் .
நாம் அதை நேரடியாக நிறுத்த முடியாது ..
தியானத்தின் மூலம் அந்த அரட்டையைக் குறைத்து ,
மறையைச் செய்யவும் முடியும் என்று ஓஷோ
சொல்லி இருக்கிறார் .
தியானம் நாம் செய்து வருகிற போது
மனம் ஓர் உபயோகமான கருவியாகிறது ..
தியானம் தான் முதலும் கடைசியுமான சுதந்திரம்
என்று ஓஷோ சொல்லி இருக்கிறார் .

No comments:

Post a Comment